அதிரைக்கு 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த விருந்தாளிகள்! பத்திரமாக திரும்பினர்!!

அதிராம்பட்டினம் பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காடுகள் அருகில் வங்ககடல் அமைந்துள்ளது. அதோடு காட்டாறுகள் இக்காடு வழி யாக சென்று கடலில் கலக்கிறது. புவியியல் அமைப்பில் இவை அதிக ஈரப்பதம் உள்ள காடு அலையாத்திகாடுகள் ஆகும். 
பறவைகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலை இங்கு அமைந்துள்ளதால் 

ஆஸ்திரேலியா, அமெரி க்கா, கனடா, இலங்கை, பாகிஸ்தான், ரஷ்யா, இந்தோனேசியா, இலங்கை என 20க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கூளக்கிடா, செங்கால்நாரை, பூநாரை, பவளக் கால் உள்ளான், மயில்கால் கோழி, பாம்புதாரா என 50க்கும் மேற்பட்ட வகைகளில் லட்சக்கணக்கான நீர்பறவைகள் விருந்தாளியாக அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு கடந்த நவம்பர் மாதம் வந்தன. 


தற்போது சீசன் முடிந்து நீர்நிலைகள் வற்றியுள்ளதாலும், கோடை காலம் துவங்க உள்ளதாலும் வெளிநாடுகளிலிருந்து வந்த பறவைகள் பத்திரமாக திரும்பிச் செல்ல தொடங்கி விட்டன. 
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.