Breaking News
recent

அதிரையில் முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா!!

நமதூர் அதிரையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 66 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 11-03-2013 பிற்பகல் 12 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பிறைக்கொடியை அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகில் திருப்பூர் MK.முஹம்மது யூனுஸ் (இளைஞர் லீக் செயலர்) அவர்கள் கொடி ஏற்றி வைதார்கள்.

இதில் மானிய துணைத் தலைவர் SSB.நசுருதீன்,மாவட்டத் தலைவர் PS .ஹமீது,மாவட்ட பொருளாளர் அப்துல் காதர்,தலைமை கழக பேச்சாளர் ஜெய்னுல் ஆபிதீன்,ராஜா முஹம்மது,நகரத் தலைவர் KK.ஹாஜா,செயலாளர் (வழக்கறிஞர்) அப்துல் முனாப்,துணை செயலாளர் ஷேக் அப்துல்லா,துணைத் தலைவர் SM.அக்பர் ஹாஜியார்,கவிஞர் தாஹா (ஆலிம்), இளைஞர் அணி செயலாளர் (நிருபர்) ஷாகுல் ஹமீது,ஜாகிர் உசேன்,ஜமால் முஹம்மது,அபுல் ஹசன் முஹைதீன் (ஆலிம்),வாப்பு மரைக்காயர்,ராவுத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்பு கடலோர பகுதிகளுக்கு கொடியேற்றி வைப்பதற்காக இந்த கேம்ப் புறப்பட்டு புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம்,செந்தலை பகுதிகளில் கம்பீர முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது...

இளைஞர் லீக் செயலாளர் MK.முஹம்மது யூனுஸ் கொடி ஏற்றும் பொழுது எடுத்த படம்.



அதிரை குரல்

அதிரை குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.